செய்திகள்,விளையாட்டு 9-ஆண்டு கால பெண் தோழியை திருமணம் செய்யும் பிரபல டென்னிஸ் வீரர்…!

9-ஆண்டு கால பெண் தோழியை திருமணம் செய்யும் பிரபல டென்னிஸ் வீரர்…!

9-ஆண்டு கால பெண் தோழியை திருமணம் செய்யும் பிரபல டென்னிஸ் வீரர்…! post thumbnail image
லண்டன் :- ஸ்காட்லாந்தில் உள்ள டன்பிளேனில் வசித்து வரும் முர்ரேவின் இல்லத்தில் வசிக்கும் குடும்பத்தினரிடம் அவர் தனது ஒன்பது ஆண்டு கால பெண் தோழியான கிம் சியர்சை திருமணம் செய்து கொள்ள உள்ளேன் என்ற செய்தியை தெரிவித்தவுடன் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். தனது 83 வயது பாட்டியான ஷிர்லி எஸ்கைய்னிடம் இவ்விஷயத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முர்ரே கூறியபோது, திருமணத்திற்கான நேரம் வந்துவிட்டது என்று அவர் நகைச்சுவையுடன் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஷிர்லி, நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளோம். கிம் மிகவும் அன்பான பெண் என்றார். அவரது தாத்தா ராய் கூறுகையில், ஆண்டி தொலைபேசியில் எங்களை அழைத்து கிம்மிடம் தனது விருப்பத்தை கூறியதாக தெரிவித்தார் என்றார். முர்ரேவின் திருமண செய்தி பற்றிய அறிவிப்பு வெளியானவுடன் டன்பிளேனில் வசிக்கும் ஏராளமான சிறுவர்கள் அவரது இல்லத்திற்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பி வருகின்றனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலும், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியிலும் முர்ரே கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி