செய்திகள்,திரையுலகம் நாளை ‘லிங்கா’ பாடல் வெளியீடு: ரஜினி, அனுஷ்கா பங்கேற்பு!…

நாளை ‘லிங்கா’ பாடல் வெளியீடு: ரஜினி, அனுஷ்கா பங்கேற்பு!…

நாளை ‘லிங்கா’ பாடல் வெளியீடு: ரஜினி, அனுஷ்கா பங்கேற்பு!… post thumbnail image
சென்னை:-‘லிங்கா’ படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். நாயகியாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடித்துள்ளனர். கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ளார். சுதந்திரத்துக்கு முந்தைய கால கட்டத்திலும் இப்போது காலகட்டத்திலுமாக இரு வேறு சம்பவங்களை உள்ளடக்கிய கதையம்சத்தில் இப்படம் தயாராகியுள்ளது. ஒரு அணைக்காக நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு கர்நாடகா, ஆந்திரா மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வெளிநாட்டுக்கு சென்று பாடல் காட்சியையும் படமாக்கிவிட்டு திரும்ப உள்ளனர். அடுத்த மாதம் டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்த நாளையொட்டி லிங்கா படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக டப்பிங், ரீரிக்கார்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

லிங்கா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நாளை காலை சத்யம் தியேட்டரில் நடக்கிறது. இதில் ரஜினி பங்கேற்கிறார். அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் போன்றோரும் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இவ்விழாவில் லிங்கா படத்தின் டிரெய்லரும் வெளியிடப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி