செய்திகள்,திரையுலகம் ஏ.ஆர்.ரகுமான், அனிருத்தை ஓரங்கட்டி முதல் இடத்தை பிடித்த யுவன் ஷங்கர் ராஜா!…

ஏ.ஆர்.ரகுமான், அனிருத்தை ஓரங்கட்டி முதல் இடத்தை பிடித்த யுவன் ஷங்கர் ராஜா!…

ஏ.ஆர்.ரகுமான், அனிருத்தை ஓரங்கட்டி முதல் இடத்தை பிடித்த யுவன் ஷங்கர் ராஜா!… post thumbnail image
சென்னை:-யுவன் சில நாட்களாகவே சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இதனால் முன்பு போல் இவரால் ஹிட் பாடல்களை கொடுக்க முடியவில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், இதையெல்லாம் பொய்யாக்கும் பொருட்டு மீண்டும் முதல் இடத்திற்கு வந்தார் யுவன். சென்னையின் பிரபல வானொலி எடுத்த கருத்துக்கணிப்பில் இது தெரிய வந்துள்ளது.

ரகுமான் இசையில் ஐ, காவியத்தலைவன், அனிருத் இசையில் கத்தி என பிரம்மாண்ட படங்கள் வந்தாலும், இதையெல்லாம் பின்னுக்கு தள்ளி யுவன் இசையமைத்த திருடன் போலிஸ் படத்தில் வரும் ‘பேசாதே பார்வைகள் வீசாதே’ பாடல் முதல் இடத்தை பிடித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி