செய்திகள்,தொழில்நுட்பம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் ஜெனீவா விஞ்ஞானிகள் கண்டு பிடித்தது கடவுளின் துகள் அல்ல: புதிய தகவல்!…

ஜெனீவா விஞ்ஞானிகள் கண்டு பிடித்தது கடவுளின் துகள் அல்ல: புதிய தகவல்!…

ஜெனீவா விஞ்ஞானிகள் கண்டு பிடித்தது கடவுளின் துகள் அல்ல: புதிய தகவல்!… post thumbnail image
ஐதராபாத்:-கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரைச் சேர்ந்த ‘செர்ன்’ அறிவியல் மைய விஞ்ஞானிகள் தங்களது நீண்ட கால ஆராய்ச்சியில் தேடி வந்த கடவுளின் துகள் அல்லது ஹிக்ஸ போசம் என்னும் துகளை கண்டுபிடித்து சாதனை படைத்திருப்பதாக அறிவித்தனர்.

இது, இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று எனவும் பாராட்டப்பட்டது. ஆனால் ஜெனீவா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது, உண்மையில் கடவுளின் துகள் அல்ல. அது வேறு ஏதோ ஒன்று என்கிற கருத்து தற்போது வலுப்பெற்று உள்ளது.செர்ன் மையத்தின் விஞ்ஞானிகளே கூட கடவுள் துகள் கண்டுபிடிப்பு பற்றிய தங்கள் கருத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இதற்கு வலுச் சேர்க்கும் விதமாக ஐதராபாத்தைச் சேர்ந்த பி.எம். பிர்லா அறிவியல் மைய இயக்குனர் சித்தார்த், தனது சர்வதேச ஆய்வறிக்கை கட்டுரையில் மறுத்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில், வானவெளியை நீண்டகாலமாக ஆய்வு செய்து வரும் இயற்பியல் விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை கடவுளின் துகள் என்பவை விண்வெளியில் மிகவும் புதிரானவை. இது போன்ற துகள் எதுவும் இருந்தாலும் அவற்றை விண்வெளியின் புறப்பரப்பு உறிஞ்சிக்கொண்டு விடும்.எனவே கடவுள்களின் துகளோ, அதிகமான ஈர்ப்பு விசை கொண்ட கறுந்துளை பகுதியோ இயற்பியல் விஞ்ஞான கொள்கையின்படி இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி