செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் உலகின் மிகவும் வேடிக்கையான 25வது பெருநகரமாக டெல்லி தேர்வு!…

உலகின் மிகவும் வேடிக்கையான 25வது பெருநகரமாக டெல்லி தேர்வு!…

உலகின் மிகவும் வேடிக்கையான 25வது பெருநகரமாக டெல்லி தேர்வு!… post thumbnail image
லண்டன்:-உலகளாவிய அளவில் உள்ள 1830 பெருநகரங்களில் மிகவும் வேடிக்கையான இடங்கள் யாவை? என்பது தொடர்பாக சுற்றுலா ஏற்பாட்டாளர்களான ‘கெட் யுவர் ஓன் கைட்’ மற்றும் ‘கோயூரோ’ நிறுவனங்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் நபர்களிடம் ஆய்வு நடத்தியது.

ஒவ்வொரு பெருநகரங்களில் உள்ள இரவு நேர வாழ்க்கை முறை, சராசரி பீரின் விலை, கேளிக்கை மற்றும் பொழுதுப்போக்கு அம்சங்கள் போன்ற 11 அடிப்படை தகுதிகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அழகிய ’பார்கள்’, பழம்பெருமையை பாதுகாக்கும் தொன்மையான அருங்காட்சியகங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, இங்கிலாந்து தலைநகரமான லண்டன், பிரான்ஸ் தலைநகரமான பாரிஸ், அமெரிக்க தலைநகரமான நியூயார்க், ஜப்பான் தலைநகரமான டோக்கியோ ஆகியவை முறையே இரண்டு முதல் ஐந்து வரையிலான சிறப்பு இடங்களை பெற்றன. இந்தியாவின் தலைநகரமான டெல்லி இந்தப் பட்டியலில் 25-வது இடத்தில் உள்ளது. இந்த ஆய்வின் முடிவில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய பெருநகரம் புதுடெல்லிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி