செய்திகள்,திரையுலகம் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் சம்பளம் ஒரு கோடி!…

‘ரஜினி முருகன்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் சம்பளம் ஒரு கோடி!…

‘ரஜினி முருகன்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் சம்பளம் ஒரு கோடி!… post thumbnail image
சென்னை:-பொன்ராம் இயக்கும் ரஜினி முருகன் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெற்றிப் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனும், பொன்ராமும் இணையும் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 30ம் தேதி காரைக்குடியில் துவங்கவிருக்கிறது. திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு கோடி சம்பளத்துக்கு இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் சிவகார்த்திகேயன்.அதன் பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமும், மான்கராத்தே படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தன. இவ்விரு படங்களின் வெற்றி காரணமாக தற்போது சிவகார்த்திகேயனுக்கு 10 கோடி சம்பளம் தர தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.
பழைய கமிட்மெண்ட் என்பதால் ரஜினி முருகன் படத்தில் ஏற்கனவே பேசிய ஒரு கோடி சம்பளத்துக்கு நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி