செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் முதலை போன்ற ஊர்வன செவ்வாய் கிரகத்தில் இருந்ததற்கான ஆதாரம்!…

முதலை போன்ற ஊர்வன செவ்வாய் கிரகத்தில் இருந்ததற்கான ஆதாரம்!…

முதலை போன்ற ஊர்வன செவ்வாய் கிரகத்தில் இருந்ததற்கான ஆதாரம்!… post thumbnail image
வாஷிங்டன்:-செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாய் கிரகத்தில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்புவதற்காக, அந்த விண்கலத்தில், ‘மாஸ்ட்கேம்’ என்ற கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘ரோவர்’ விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்பி வருகிறது. இந்த் படங்களில் ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சியாளர்கள் பல வேறு தகவல்கலை தெரிவித்து வருகின்றனர்.சமீபத்தில், ரோவர் அனுப்பிய படங்களை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் விலங்குகளின் தொடை எலும்புகள் கீழே கிடப்பது போன்று தோன்றுகிறது. டைனோசருக்கும் முன்பே, செவ்வாய் கிரகத்தில் பெரியவகை விலங்குகள் வாழ்ந்து இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர்..

இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் முதலைபோன்ற ஒரு உயிரினம் வாழ்ந்ததாக சுட்டி காட்டி உள்ளனர்.வானியல் ஆராய்ச்சியாளர் ஜோ ஓயிட் ( வயது 45) ஒரு பாறை காட்சிகளை ஆராய்ச்சி செய்யும் போது அது ஒரு முதலையின் மூக்கு வடிவம் போல் தெரிந்தது. என கூறினார். இது குறித்து விண்வெளி வீடியோ ஆராய்ச்சியாளர் பிரிஸ்டல் கூறும் போது செவ்வாய்கிரகத்தில் தென்படும் அந்த பொருள் பூமியில் வாழும் முதலையை போன்று இருக்கிறது.ஆனால் அது கடினமாக உள்ளது.ஆனால் அது உறைந்த நிலையில் படிமங்களாக இருந்தது. இது மேலும் செவ்வாய்கிரகத்தில் உயினங்கள் வாழந்ததற்கான சான்றாக உள்ளது. ரோவர் அனுப்பிய படம் 6 அடி அயரம் கொண்டது.என்று கூறினார்.ஆனால் இது குறித்து நாசா ஆராய்ச்சி நிலையம் எந்த அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி