செய்திகள்,விளையாட்டு இந்தியா– வெஸ்ட் இண்டீஸ் பிரச்சினை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவலை!…

இந்தியா– வெஸ்ட் இண்டீஸ் பிரச்சினை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவலை!…

இந்தியா– வெஸ்ட் இண்டீஸ் பிரச்சினை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவலை!… post thumbnail image
புதுடெல்லி:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்ததால் அந்நாட்டுடன் போட்டி தொடரை இந்தியா ரத்து செய்தது. இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழுவில் வெஸ்ட் இண்டீசுடன் இனி போட்டி கிடையாது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தியா– வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியங்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் ஐ.சி.சி. கவலை அடைந்துள்ளது. இது இரு வாரியங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் தங்களால் தலையிட இயலாது என்று தெரிவித்துள்ளது. வருகிற 10ம் தேதி துபாயில் நடை பெறும் ஐ.சி.சி. செயற்குழுவில் இதுபற்றி விவாதிக்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி