செய்திகள்,முதன்மை செய்திகள் கட்ச் பகுதியில் ஐந்தாயிரம் ஆண்டு பழமையான கிணறு கண்டுபிடிப்பு!…

கட்ச் பகுதியில் ஐந்தாயிரம் ஆண்டு பழமையான கிணறு கண்டுபிடிப்பு!…

கட்ச் பகுதியில் ஐந்தாயிரம் ஆண்டு பழமையான கிணறு கண்டுபிடிப்பு!… post thumbnail image
குஜராத்:-மொகஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளில் கண்டுபிடிக்கபட்ட கிணறுகளை விட மூன்று மடங்கு பெரிய கிணறு ஒன்று குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள டோலாவிரா என்ற இடத்தில் கண்டுபிடிக்கபட்டுள்ளது. இந்த கிணறு ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கிணறு ஹரப்பா நாகரிகத்தை சேர்ந்தது என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொகஞ்சதாராவில் உள்ள கிரேட் பாத் என்று அழைக்கபடும் கிணற்றை விட இது மூன்று மடங்கு பெரியது என்று தொல்லியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சிந்து சமவெளி நாகரிகத்தை சேர்ந்த இந்த பகுதியில் அடுத்த அடுத்த நடந்த காலகட்டங்களில் இயற்கையின் சீரழிவுகளால் இது மண்ணோடு மண்ணாக புதைந்து இருகலாம் என்று தொல்லியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த பகுதியில் அந்த கால கட்டத்தில் வாணிப தளங்கள் இருந்து இருக்கலாம் என்று தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மொகஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகள் இந்தியாவின் வடமேற்கு பகுதியிலும், இன்றைய பாகிஸ்தானிலும் இருக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி