அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் பிரதமர் மோடியின் விமானத்தில் வெடிகுண்டு: பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி!…

பிரதமர் மோடியின் விமானத்தில் வெடிகுண்டு: பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி!…

பிரதமர் மோடியின் விமானத்தில் வெடிகுண்டு: பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி!… post thumbnail image
புதுடெல்லி:-பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்று வந்தார்.‘ஏர்–இந்தியா ஒன்’ என்ற ஜம்போ ஜெட் விமானத்தில் மோடி அமெரிக்கா சென்று வந்தார்.இதற்கிடையே பிரதமருக்குரிய பிரத்யேக விமானத்தில் ஏதேனும் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு விட்டால், மாற்று விமானம் ஒன்றை டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தயாராக நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் படி போயிஸ் – 746 என்ற ரக விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டது.

பிரதமர் மோடி அமெரிக்கா சுற்றுப் பயணம் முடிந்து திரும்பியதைத் தொடர்ந்து அந்த போயிங் விமானம் மீண்டும் பயணிகள் சேவைக்கு விடப்பட்டது. நேற்று அந்த விமானம் டெல்லி, மும்பை, ஐதராபாத் வழியாக ஜெட்டா சென்றது. இன்று அதிகாலை அந்த விமானம் ஜெட்டா சென்று சேர்ந்ததும், அந்த நாட்டு பாதுகாப்புப்படையினர் அந்த விமானத்தில் சோதனையிட்டனர். அப்போது பிசினஸ் கிளாஸ் பகுதியில் உள்ள இருக்கை ஒன்றின் கீழ் கை எறி வெடிகுண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த வெடிகுண்டை பத்திரமாக அகற்றி ஆய்வு செய்தனர். அப்போது அது ஏற்கனவே செயல் இழக்க செய்யப்பட்ட குண்டு என்று தெரியவந்தது. அது எப்படி பிரதமர் மோடி பயன்படுத்த ஒதுக்கப்பட்ட விமானத்துக்குள் வந்தது என்பது மர்மமாக உள்ளது.

விமானத்துக்குள் செயல் இழந்த வெடிகுண்டு இருந்தது பற்றி ஜெட்டா அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதை கேட்டதும் இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.இன்று கோழிக்கோடுக்கு திரும்பி வரும் அந்த விமானத்தில் ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். செயல் இழந்த வெடிகுண்டை வைத்து தீவிரவாதிகள் ஒத்திகை பார்த்து இருக்கலாமோ என்ற சந்தேகம் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி