செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் எபோலா நோய்த்தாக்கத்துடன் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள முதல் நோயாளி!…

எபோலா நோய்த்தாக்கத்துடன் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள முதல் நோயாளி!…

எபோலா நோய்த்தாக்கத்துடன் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள முதல் நோயாளி!… post thumbnail image
டல்லாஸ்:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் தென்பட்ட எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் விரைந்து பரவி இதுவரை 3000 பேரை பலி கொண்டுள்ளது. உலக நாடுகளின் உதவியுடன் இந்த நோயைக் கட்டுக்குள் கொண்டுவர ஆப்பிரிக்க நாட்டு அரசுகள் போராடிக் கொண்டிருக்கின்றன.

இதனைத்தொடர்ந்து பல நாடுகளும் தங்களின் விமான சேவைகளை அந்தப் பகுதிகளுக்கு நிறுத்தியுள்ளதோடு அங்கிருந்து வரும் பயணிகளையும் விமான நிலையங்களில் சோதனையிட்ட பிறகே வெளியேற அனுமதிக்கின்றன. ஆனால் இந்த நோய்த்தொற்று ஒருவரை ஆட்கொள்ளும்போது வெளித்தெரிவதற்கு இரண்டிலிருந்து 21 நாட்கள் வரை எடுத்துக் கொள்கின்றது. இதனால் சில நேரங்களில் சோதனையின் போதும் இந்த அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படுவதில்லை.அமெரிக்காவிலிருந்து மேற்கு ஆப்பிரிக்காவிற்குப் பயணித்த ஒருவர் டல்லாசிற்கு திரும்பி வந்து சில நாட்கள் கழிந்த நிலையில் அவருக்கு இந்த நோய்த்தாக்கம் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நேற்று தெரிவித்துள்ள அரசு சுகாதார அதிகாரிகள் டல்லாசின் டெக்சாஸ் சுகாதார பிரெஸ்பிடேரியன் மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அந்த நோயாளி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள முதல் எபோலா நோயாளி இவர் ஆவார். இதனையொட்டி அந்த மருத்துவமனையில் உள்ள பிற நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த நோய் தாக்காவண்ணம் தொற்றுநோய் கட்டுப்பாடு அங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்றும் மருத்துவ அறிக்கை குறிப்பிட்டுள்ளது.இதற்கு முன்னாலும் எபோலா நோய் தாக்கியவர்களுக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அனைவரும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சுகாதாரப் பணி புரிந்துவந்தபோது நோய்த்தாக்கத்திற்கு ஆளாகி அதன்பின் சிகிச்சைக்காக இங்கு கொண்டுவரப்பட்டவர்கள் என்று அரசு அறிக்கை தெரிவிக்கின்றது.அமெரிக்க மருத்துவமனைகள் எபோலா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருப்பதாகவும், மேற்கு ஆப்பிரிக்கா போல் இங்கும் அச்சுறுத்தும் நிலை காணப்படாது என்றும் மருத்துவ இயக்குனரகத்தின் தலைவர் டாக்டர் தாமஸ் பிரைடன் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி