செய்திகள்,திரையுலகம் ‘வேலையில்லா பட்டதாரி’ ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் நடிகர் தனுஷ்!…

‘வேலையில்லா பட்டதாரி’ ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் நடிகர் தனுஷ்!…

‘வேலையில்லா பட்டதாரி’ ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் நடிகர் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-நடிகர் தனுஷின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த படம் வேலையில்லா பட்டதாரி. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய இந்தப் படத்தை தயாரித்த வரும் தனுஷ்தான். சமீபத்தில் வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடி 75வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் தமிழில் வேலையில்லா பட்டதாரி படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, படத்தை ஹிந்தியிலும் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார் தனுஷ். முதலில் இந்தப் படத்தில் ஹிந்தி நடிகர் ஒருவரை தான் நடிக்க வைக்கலாம் என நினைத்தாராம்.ஆனால் இப்போது ஹிந்தியிலும் தான் நடித்தால் என்ன என்று யோசித்து வருகிறாராம் தனுஷ். ஏற்கெனவே ஹிந்தியில் தனுஷ் அறிமுகமான ராஞ்சனா படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது.

தவிர, தற்போது ‘ஷமிதாப்’ படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருவதால் அவர் மேலும் பிரபலம் அடைந்துள்ளார்.இதை பயன்படுத்தி ‘வேலையில்லா பட்டதாரி’ ரீமேக்கில் தானே நடிக்கும் திட்டத்தில் இருக்கிறார் தனுஷ். அதோடு தமிழில் பணியாற்றிய இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் வேல்ராஜ் ஆகியோரை ஹிந்திக்கு கொண்டு செல்லும் திட்டமும் இருக்கிறதாம். இதற்கான பணிகளை 2015 ஜூலையில் துவங்க இருக்கிறார் தனுஷ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி