செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ ரிலீஸ் – தெலுங்கு திரையுலகினர் எதிர்ப்பா!…

‘ஐ’ ரிலீஸ் – தெலுங்கு திரையுலகினர் எதிர்ப்பா!…

‘ஐ’ ரிலீஸ் – தெலுங்கு திரையுலகினர் எதிர்ப்பா!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ படத்தின் டீஸர் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் வியாபாரப் பேச்சுக்களும் சூடு பிடித்துள்ள நிலையில் தெலுங்கு டப்பிங் உரிமை சுமார் 33 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகள், தெலுங்குத் திரையுலகில் மிகப் பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாம்.முன்னணி ஹீரோக்கள் நடித்த பல நேரடித் தெலுங்குப் படங்களே அந்த அளவிற்கு வியாபாரம் ஆகாத நிலையில் தமிழிலிருந்து வெளிவரும் ஒரு டப்பிங் படம் இந்த அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றது அவர்களிடையே கோபத்தையும் தூண்டியுள்ளதாகத் தெரிகிறது.

இதனால், பல சிறிய தயாரிப்பாளர்கள் தாங்கள் பாதிக்கப்படுவதாக மனக்குமுறல்களை வெளியிட்டிருக்கிறார்களாம். இதன் மூலம் தெலுங்குத் திரையுலகம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்களாம். தெலுங்கு மீடியாக்களும் இப்படி வெளிவரும் டப்பிங் படங்களுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் தெரிகிறது. இது போன்ற பெரிய டப்பிங் படங்கள் தெலுங்கு பேசும் இரண்டு மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டால், சிறிய படங்களை எப்படி வெளியிட முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஹிந்தி டப்பிங் படங்களும், தமிழ் டப்பிங் படங்களும் தெலுங்குத் திரையுலகில் காலூன்றுவதை அவர்கள் விரும்பவில்லையாம். ஏனெனில், தெலுங்கிலிருந்து மற்ற மொழிகளுக்கு டப்பிங் ஆகும் படங்களுக்கு வரவேற்பே கிடைப்பதில்லை என்பதையும் அவர்கள் காரணமாகச் சொல்கிறார்கள். அதனால் ‘ஐ’ படம் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாவதற்குள்ளாக பலத்த எதிர்ப்புகளையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி