அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சீன அதிபருடன் சோனியா காந்தி சந்திப்பு!…

சீன அதிபருடன் சோனியா காந்தி சந்திப்பு!…

சீன அதிபருடன் சோனியா காந்தி சந்திப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான இன்று டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சி தலைவர்கள் சிலரை சந்தித்தார்.பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் சீன அதிபரை சந்தித்தார்.

சீன அதிபர் தங்கியுள்ள டெல்லி தாஜ் ஓட்டலில் 10 மணி முதல் 11 மணிவரை இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த தகவலை லோக் சபா அதிகாரிகள் தெரிவித்தனர்.சீன அதிபர் ஜின்பிங் தனது மனைவி பெங் லியூன் மற்றும் 50 அதிகாரிகளுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று பிற்பகலில் அவர் சீனா புறப்படுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி