செய்திகள்,திரையுலகம் மலேசியாவில் இந்திய படவிழா: திரிஷா, அமலாபால், சிம்புக்கு விருது!…

மலேசியாவில் இந்திய படவிழா: திரிஷா, அமலாபால், சிம்புக்கு விருது!…

மலேசியாவில் இந்திய படவிழா: திரிஷா, அமலாபால், சிம்புக்கு விருது!… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா மலேசியாவில் நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ் நடிகைகளில் திரிஷா, அமலாபால் ஆகியோர் சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றனர். நடிகர் கார்த்திக், குஷ்பு ஆகியோர் விழாவில் பங்கேற்று விருதுகள் வழங்கினார்கள். சிம்பு சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை பெற்றார்.தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர்., காஜல் அகர்வால் நடித்து வெளிவந்த பாட்ஷா படத்தில் சிம்பு டைமன்ட்கேஸ் என துவங்கும் பாடலை பாடி இருந்தார். இந்த பாடலுக்காக அவருக்கு விருது கிடைத்தது.

விருது பெற்றது குறித்து சிம்பு கூறும் போது, முதன் முதலாக தெலுங்கு படத்தில் பாடியதற்காக விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். சிரஞ்சீவி, ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி