செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் இந்தியாவில் தொழில் செய்வது கடினமான காரியம் – ஹோண்டோ மோட்டார்ஸ்!…

இந்தியாவில் தொழில் செய்வது கடினமான காரியம் – ஹோண்டோ மோட்டார்ஸ்!…

இந்தியாவில் தொழில் செய்வது கடினமான காரியம் – ஹோண்டோ மோட்டார்ஸ்!… post thumbnail image
புதுடெல்லி:-புதிதாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி அரசு பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் இன்னும் தளர்ச்சியாகத்தான் இருப்பதாகவும் செயல்முறை சிக்கல்கள் மற்றும் சில சுமைகள் காரணமாக இந்தியாவில் முதலீடு செய்வது இன்னும் கடினாமான ஒன்றாகவே இருப்பதாக ஹோண்டோ மோட்டார்ஸின் உலகளாவிய தலைவர் புமிகிகோ ஐக் தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு தலைவராகவும் உள்ள ஐக் கூறுகையில், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் நிச்சயமில்லாத வரி ஆட்சி போன்றவை காரணமாக இந்தியாவில் முதலீடு செய்வது கடினமாக உள்ளதாகவும் புதிய அரசு முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி