செய்திகள்,திரையுலகம் கெளதம்மேனனுக்கு நன்றி சொன்ன நடிகை திரிஷா!…

கெளதம்மேனனுக்கு நன்றி சொன்ன நடிகை திரிஷா!…

கெளதம்மேனனுக்கு நன்றி சொன்ன நடிகை திரிஷா!… post thumbnail image
சென்னை:-மார்க்கெட் அவுட்டாகப்போகிறது என்கிற நேரத்தில் கெளதம்மேனன், அஜீத்துடன் தன்னை ஜோடி சேர வைத்திருப்பதால் அவருக்கு நேரில் மட்டுமின்றி தனது டுவிட்டரின் மூலமும், நன்றிகளை தெரிவித்துள்ளார் திரிஷா.மேலும், திரிஷாவின் இந்த அதிகப்படியான சந்தோசத்திற்கு காரணம், விநாயகர் சதுர்த்தியின்போது அஜீத்தின் இளமையான கெட்டப்புடன் த்ரிஷாவும் புடவை தேவதையாக தோன்றிய காட்சிகளைப்பார்த்த ரசிக கோடிகள் அவர்களின் ஜோடிப்பொறுத்தத்தை புகழ்ந்து தள்ளி விட்டார்களாம்.

எங்கள் தல இதுவரை நடித்த ஹீரோயினிகளில் அவருடன் அதிக படங்களில் நடித்தவர் என்பதோடு அவருக்கு மிகப்பொருத்தமான ஒரே நடிகை திரிஷா மட்டுமே என்றும் அஜீத்தின் ரசிகர்கள் இணையதளம் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு வருகிறார்களாம்.அஜீத் ரசிகர்களின் இந்த வாழ்த்துக்களால் உச்சகட்ட சந்தோசத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் திரிஷா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி