செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘ஐ’ என்றால் என்ன அர்த்தம்!… ரகசியம் வெளியானது…

‘ஐ’ என்றால் என்ன அர்த்தம்!… ரகசியம் வெளியானது…

‘ஐ’ என்றால் என்ன அர்த்தம்!… ரகசியம் வெளியானது… post thumbnail image
‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.ரஜினி, கமல் உள்ளிட்ட திரைஉலகப் பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் ஐ படத்தின் ஆடியோவை அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் வெளியிட, கமல், ரஜினி இருவரும் பெற்றுக் கொள்கிறார்கள். இசை வெளியீட்டை முடித்த கையோடு ஐ படத்தை உலகமெங்கும் கிட்டத்தட்ட 20000 திரையரங்குகளில் வெளியிடும் முயற்சியில் ஈடுபட உள்ளனர். சீனாவில் மட்டும் சுமார் 15000 தியேட்டர்களில் மிகப்பெரிய அளவில் வெளியிடப்போவதாகவும் சொல்கிறார் ஐ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.

இதற்கிடையில், ஐ படத்திற்காக விக்ரம் போட்டிருக்கும் கெட்அப் பற்றிய செய்தி ஒன்று தற்போது கசிந்திருக்கிறது. அதாவது ஓநாய் மனிதராக ஒரு கெட்அப்பில் நடித்திருக்கிறார் விக்ரம். இந்தத் தோற்றத்திற்காக 70 கிலோ எடையிலிருந்து 120 கிலோ எடைக்கு அதிகரித்து, பின்னர் 50 கிலோவாக எடையைக் குறைத்து கடுமையாக உழைத்திருக்கிறாராம் விக்ரம். அதோடு, இப்படத்தின் வசனகர்த்தாவும் எழுத்தாளர்களுமான சுபா ஐ என்ற தலைப்பு குறித்து ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்கள்.ஐ என்றால் என்ன? வியப்பு, அழகு, மென்மை, நுன்மை, கோழை, தலைவன், கணவன், அரசன், ஆசான், தயாரிக்கப்பட்ட நச்சு பாஷாணம் என பல அர்த்தங்கள் உண்டு.

ஷங்கர் படத்துக்கு வைக்கப்பட்ட தலைப்பு இதில் எதைக் குறிக்கிறது என்று சஸ்பென்ஸ் வைத்து குறிப்பிட்டிருக்கிறார்கள்.அவர் சொல்லியிருப்பதை வைத்துப் பார்க்கும் போதும், ஐ படத்தின் கதையை அறிந்த வரையிலும் தயாரிக்கப்பட்ட நச்சு பாஷாணம் என்ற அர்த்தத்திலேயே ஐ என்ற தலைப்பை வைத்திருக்கிறார் ஷங்கர். ஏனெனில், ஐ படத்தின் கதைப்படி கதாநாயகனான விக்ரம், வில்லனால் படு மோசமாக பழி தீர்க்கப்படுகிறான். அதாவது, விக்ரம் உடம்பில் மிக கொடிய வைரஸை ஊசி மூலம் செலுத்திவிடுகிறான் வில்லன். விக்ரம் உடம்பினுள் செலத்தப்பட்ட அந்த வைரஸ் காரணமாக விக்ரம் உடம்பு உருக்குலைந்துபோகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி