செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் வெளியாகும் ‘ஐ’!…

உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் வெளியாகும் ‘ஐ’!…

உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் வெளியாகும் ‘ஐ’!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள ‘ஐ’ திரைப்படம் அக்டோபர் 22ம் தேதியன்று உலகம் முழுவதும் உள்ள 20000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம். அதில் சீனாவில் மட்டும் 15000 திரையரங்குகளில் வெளியாகப் போகிறதாம்.இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஜப்பானிஸ், தைவானிஸ், மான்டரின் என பல மொழிகளில் வெளியிட உள்ளார்களாம்.

அப்படி நடக்கும் பட்சத்தில் ஒரு இந்தியத் திரைப்படம் உலகம் முழுவதும் அவ்வளவு திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறையாக இருக்கும். சுமார் 3 ஆண்டு காலமாக இப்படத்தை இயக்குனர் ஷங்கர் உருவாக்கி வருகிறார். படத்திற்காக விக்ரம் மூன்று விதமான தோற்றங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அதற்கு மேல் இளைத்தால் உயிருக்கே ஆபத்து என டாக்டர்கள் சொல்லுமளவிற்கு உடலை மிக ஒல்லியாக இளைக்க வைத்து நடித்திருக்கிறாராம் விக்ரம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி