செய்திகள் சுவிட்சர்லாந்தில் நடுவானில் விமானங்கள் மோதல்!…

சுவிட்சர்லாந்தில் நடுவானில் விமானங்கள் மோதல்!…

சுவிட்சர்லாந்தில் நடுவானில் விமானங்கள் மோதல்!… post thumbnail image
ஜெனிவா:-சுவிட்சர்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் பறந்துகொண்டிருந்த இரண்டு இலகுரக விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் அதில் பயணம் செய்த ஆறு பேர் படுகாயமடைந்தனர்.மோதிக்கொண்ட பின்னர் இவற்றில் ஒரு விமானம் செயின்ட் காலன் பகுதியில் உள்ள வயல்வெளியில் இறங்கியது. அதில் பயணித்த மூன்று பேரும், விமானியும் இந்த விபத்தில் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகின்றது.

மற்றொரு விமானம் அருகில் உள்ள சிட்டர்டோர்ப் ராணுவதளத்தில் தரையிறங்கியது. இதிலிருந்த இரண்டு பயணிகளும் கூட படுகாயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இந்த சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை என்று கூறப்படுகின்றது. விமானங்களின் சேதங்கள் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை என்றபோதும் சிதறிய பாகங்கள் உள்ளூர் நிறுவனம் ஒன்றின் வளாகத்தினுள் விழுந்திருந்ததாகக் காவல்துறை அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி