செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் டோனி விலகலா?…

டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் டோனி விலகலா?…

டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் டோனி விலகலா?… post thumbnail image
லண்டன்:-இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இந்திய அணி தோற்று தொடரை 1–3 என்ற கணக்கில் இழந்தது.இங்கிலாந்திடம் ஏற்பட்ட இந்த மோசமான தோல்வியால் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பொறுத்து இருந்து பாருங்கள் என்றார். நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:–

2011–ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் தொடரை 0–4 என்ற கணக்கில் இழந்தோம். அதைவிட தற்போதுள்ள நிலை மோசமானதாக கருதவில்லை. 2011–ல் ஏற்பட்ட தோல்வியே மிகவும் மோசமானது. அதே நேரத்தில் லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற்று கடந்த 3 டெஸ்டிலும் தோற்றது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.டெஸ்ட் தொடரை 1–3 என்ற கணக்கில் இழந்ததற்காக டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவீர்களா? என்று கேள்வி எழுப்புகிறீர்கள். 2011–ல் ஏற்பட்ட தோல்வியின் போதும் இதே கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு நீங்கள் பொறுத்து இருந்து பாருங்கள். நான் போதுமான வலுவுடன் இருக்கிறேனா என்பதும் போதுமான வலுவான நிலை இல்லை என்றால் எப்படி இருக்கும் என்பதும் உங்களுக்கு தெரியும்.எங்களது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. தொடக்க வரிசையும், அதை தொடர்ந்து மிடில் ஆர்டர் வரிசையும் ஏமாற்றம் அளித்தது. லார்ட்ஸ் டெஸ்டில் பெற்ற வெற்றியில் நாங்கள் அதிகமான நம்பிக்கை அடையவில்லை.இவ்வாறு டோனி கூறியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி