செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் கத்தி படத்தில் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கிறாராம் விஜய்!…

கத்தி படத்தில் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கிறாராம் விஜய்!…

கத்தி படத்தில் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கிறாராம் விஜய்!… post thumbnail image
சென்னை:-கத்தி படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் விஜய். அதில் ஒருவர் ஹீரோ, இன்னொருவர் வில்லன். அந்த வில்லனின் கதாபாத்திரம் அரசியல்வாதி போன்று சித்தரிக்கப்பட்டுள்ளதாம். அவர் செய்யும் ஊழல்களுக்குத்தான் ஹீரோ விஜய் முடிவு கட்டுகிறாராம்.

இந்த படத்தில் விஜய்யின் அதிரடி நடிப்பும், வசனங்களும் இன்றைய சில அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளதாம்.அதோடு, விஜய் நடித்து வெளியான தலைவா படத்திலும் இதுபோன்று பஞ்ச் டயலாக்குகள் இருந்ததினால்தான் படம் வெளியாவதற்கு முன்பு பிரச்சனைகள் உருவானது. அதையடுத்து, அவற்றை கத்தரித்த பிறகுதான் பிரச்சனைகளும் சுமூகமாக தீர்க்கப்பட்டது.

தற்போது கத்திக்கு மாணவர்கள் அமைப்புகள் என்ற பெயரில் உருவாகியிருக்கும் எதிர்ப்புகளுக்கு பின்னணியில் அரசியலும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஆனபோதும், அவற்றை எடுத்தால் படம் உப்புசப்பில்லாமல் போய்விடும் என்பதால் அதற்கு இடம் கொடுக்காமல் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினையை தீர்க்க முயற்சித்து வருகிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி