செய்திகள்,திரையுலகம் ரஜினி காட்டிய வழியில் ஜி.வி.பிரகாஷ்குமார்!…

ரஜினி காட்டிய வழியில் ஜி.வி.பிரகாஷ்குமார்!…

ரஜினி காட்டிய வழியில் ஜி.வி.பிரகாஷ்குமார்!… post thumbnail image
சென்னை:-வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ்குமார். 8 ஆண்டுகளில் 25 படங்களுக்கு இசையமைத்து விட்டார். திடீரென்று பென்சில் என்ற படத்தில் நாயகனாக அரிதாரம் பூசினார். அந்த படமே இன்னும் திரைக்கு வராத நிலையில், அதற்கடுத்து திரிஷா இல்லேன்னா நயன்தாரா என்றொரு படத்தில் கமிட்டான அவர், இப்போது டார்லிங் என்றொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

நாயகனாக நடித்த முதல் படமே இன்னும் திரைக்கு வராத நிலையில், அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஜி.வி.பிரகாஷ் கமிட்டாகியிருப்பதற்கு காரணம், ஒருவேளை முதல் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை என்றால், அதன்பிறகு தன்னை கமிட் பண்ண மற்ற கம்பெனிகள் முன்வரமாட்டார்கள். அதனால் அந்த படத்தின் ரிலீசுக்கு முன்பே இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருந்தால், அதில் ஏதாவது ஒன்று ஓடும்போது தப்பித்துக்கொள்ளலாம் என்பதுதான் காரணமாம்.

இந்த விசயத்தில் ரஜினி சொன்ன அட்வைசைதான் பின்பற்றுகிறாராம் அவர். அதாவது, ஒரு பட விழாவில் ரஜினி பேசும்போது, ஒரே படத்தை நம்பி நடிகர்கள் இருக்கக்கூடாது. ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க வேண்டும். அப்போது அதில் ஒன்றிரண்டு கவிழ்த்தாலும், ஏதாவது ஒரு படம் வெற்றி பெற்று நடிகர்களை காப்பாற்றி விடும் என்று சொன்னார். ரஜினி சொன்ன அந்த தாரக மந்திரத்தை மற்ற நடிகர்கள் கடைபிடிக்கிறார்களோ இல்லையோ, ஜி.வி.பிரகாஷ்குமார் கெட்டியாக பின்பற்றத் தொடங்கியிருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி