செய்திகள் ஆப்பிரிக்காவில் ‘எபோலா’ நோய்க்கு 932 பேர் பலி!…

ஆப்பிரிக்காவில் ‘எபோலா’ நோய்க்கு 932 பேர் பலி!…

ஆப்பிரிக்காவில் ‘எபோலா’ நோய்க்கு 932 பேர் பலி!… post thumbnail image
மாண்ட்ராவியா:-ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியைச் சேர்ந்த லைபிரியா, சியராலியோன் ஆகிய நாடுகளில் ‘எபோலா’ என்ற வைரஸ் காய்ச்சல் நோய் தீவிரமாக பரவிவருகிறது. இந்த நோய் தாக்கி இதுவரை 932 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொற்று நோய் என்பதால் நோய் தாக்கியவர்களை மற்றவர்கள் நெருங்குவதற்கு அச்சப்படுகிறார்கள்.

லைபிரியாவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்களையும் எபோலா விட்டுவைக்கவில்லை. இதனால் பல முக்கிய ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு விட்டன. வேகமாக பரவி வரும் எபோலா நோயை கட்டுப்படுத்துவது குறித்து உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனை 2 நாட்கள் நீடிக்கும் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி