செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் இடுப்பில் தேசியக் கொடியை கட்டி போஸ் கொடுத்த நடிகைக்கு நோட்டீஸ்!…

இடுப்பில் தேசியக் கொடியை கட்டி போஸ் கொடுத்த நடிகைக்கு நோட்டீஸ்!…

இடுப்பில் தேசியக் கொடியை கட்டி போஸ் கொடுத்த நடிகைக்கு நோட்டீஸ்!… post thumbnail image
ஐதராபாத்:-‘டர்ட்டி பாலிட்டிக்ஸ்’ என்ற பெயரில் உருவாகி வரும் இந்திப் படத்தின் சுவரொட்டிகள் சமீபத்தில் நாடு முழுவதும் வெளியிடப்பட்டன.அவற்றில், தேசியக் கொடியை இடுப்பில் கட்டியபடி நடிகை மல்லிகா ஷெராவத் சுழல் விளக்குடன் கூடிய ஒரு காரின் மீது அமர்ந்திருக்கும் காட்சி பலரை திடுக்கிடவும், திரும்பிப் பார்க்கவும் வைத்தது.

இதைக் கண்ட தனகோபால் ராவ் என்பவர், தேசியக் கொடி அவமதிப்பு சட்டத்தின் கீழ் ‘டர்ட்டி பாலிட்டிக்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர், மற்றும் நடிகை மல்லிகா ஷெராவத் ஆகியோரை தண்டிக்க வேண்டும். வணிக நோக்கத்துக்காக தேசியக் கொடியை அவமதிக்கும் இதுபோன்ற சுவரொட்டிகளை அந்த படத்தின் விளம்பரத்துக்கு பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஐதராபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இம்மனுவினை நேற்று விசாரித்த ஐதராபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா, சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு, மனுதாரரின் குற்றச்சாட்டு தொடர்பாக இன்னும் 3 வாரங்களுக்குள் தங்களது நிலைப்பாட்டினை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி, மத்திய அரசின் செயலாளர், ‘டர்ட்டி பாலிட்டிக்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர், மற்றும் நடிகை மல்லிகா ஷெராவத் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி