செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் சிம்புதான் எனக்கு பிடித்த நடிகர் – லட்சுமி மேனன்…

சிம்புதான் எனக்கு பிடித்த நடிகர் – லட்சுமி மேனன்…

சிம்புதான் எனக்கு பிடித்த நடிகர் – லட்சுமி மேனன்… post thumbnail image
லட்சுமிமேனன் தமிழில் நடித்த ‘ஜிகர்தண்டா’ படமும் மலையாளத்தில் திலீப்புடன் நடித்த ‘அவதாரம்’ படமும் ரிலீசானது. ஒரே நாளில் இரண்டு படங்கள் வந்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார். ஏற்கனவே தமிழில் அவர் நடித்த சுந்தரபாண்டியன், கும்கி, குட்டிபுலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை படங்கள் வெற்றிகரமாக ஓடின. இதன் மூலம் தமிழ் திரையுலகில் வலிமையாக கால் ஊன்றி உள்ளார்.

லட்சுமிமேனன் அளித்த பேட்டி வருமாறு:–

தமிழில் நான் நடித்த எல்லா படங்களும் ஹிட்டானது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘கொம்பன்’, ‘சிப்பாய்’ படங்களில் தற்போது நடிக்கிறேன். எல்லோருடனும் சகஜமாக பழகுவது எனக்கு பிடிக்கும். என்னுடன் நடித்த ஹீரோக்களுடனும் நட்புடன் இருக்கிறேன். ஜிகர்தண்டாவில் சித்தார்த்துடனும், அவதாரம் படத்தில் திலீப்புடனும் நடித்தது இனிமையான அனுபவம். இரண்டுமே நல்ல கதையம்சம் உள்ள படங்கள். பிளஸ்–2 படித்துக் கொண்டிருந்த போது இப்படங்களின் படப்பிடிப்பு நடந்தது. விடுமுறை நாட்களில் மட்டுமே கால்ஷீட் கொடுத்து நடித்தேன்.

நான் அழகு கிடையாது. என்முகத்தில் இருக்கும் தழும்பு அழகை கெடுக்கிறது. ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எனக்கு வரவேற்பு இருக்கிறது. நடிகர்களில் சிம்புவை எனக்கு பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி