செய்திகள்,தொழில்நுட்பம் குஜராத் அருகே இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது!…

குஜராத் அருகே இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது!…

குஜராத் அருகே இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது!… post thumbnail image
அகமதாபாத்:-இந்திய விமானப் படைக்கு சொந்தமான ‘ஜாக்குவார்’ ரக போர் விமானம் குஜராத் மாநிலத்தின் புஜ் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு கட்ச் மாவட்டத்தில் வான் எல்லையில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

பிபர் என்ற கிராமத்தின் மீது பறந்த போது திடீர் என்று ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் தரையை நோக்கி பாயத் தொடங்கியது. இதை உணர்ந்துக் கொண்ட விமானி பாரச்சூட்டை அணிந்தபடி அவசரக் கதவு வழியாக கீழே குதித்து உயிர் தப்பினார்.அந்த விமானிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் விமானம் விழுந்து நொறுங்கிய தகவல் அறிந்ததும் விமானப்படை உயரதிகாரிகள் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி