செய்திகள்,திரையுலகம் விஜய்க்காக பாலிவுட் வாய்ப்பை உதறிய ஒளிப்பதிவாளர்!…

விஜய்க்காக பாலிவுட் வாய்ப்பை உதறிய ஒளிப்பதிவாளர்!…

விஜய்க்காக பாலிவுட் வாய்ப்பை உதறிய ஒளிப்பதிவாளர்!… post thumbnail image
சென்னை:-‘நாளை’, ’சக்கர வியூகம்’, ‘மிளகா’ ஆகிய படங்களில் நடித்தவர் நட்டி என்னும் நட்ராஜ். இவரது நடிப்பில் தற்போது வெளியான ‘சதுரங்க வேட்டை’ படம் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் படங்களை விட இந்தியில் இவர் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாலிவுட் படங்களான ‘கினாக் அவுட்’, ‘டெஸி பாய்ஸ்’, ‘ரஞ்சனா’ ஆகிய படங்கள் இவர் ஒளிப்பதிவில் வெளியானவை. தற்போது இவர் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். இப்படத்திற்காக இரண்டு பெரிய பாலிவுட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பை மறுத்துவிட்டாராம்.விஜய் நடிக்கும் படம் என்பதால் பாலிவுட் படங்களை மறுத்ததாக நட்ராஜ் கூறுகிறார். ஏற்கனவே நட்ராஜ், விஜய் நடிப்பில் வெளியான ‘யூத்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி