அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!… post thumbnail image
புதுடெல்லி:-இந்திய இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.28 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தற்போது தான் வெற்றிபெற்றுள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பாரதப் பிரதமர் மோடியும் இந்திய அணிக்கு தனது பாராட்டை தெரிவித்திருக்கிறார்.இது குறித்து தனது டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மோடி கூறியுள்ளதாவது, நன்றாக விளையாடிய இந்திய அணி அற்புதமான வெற்றியை பெற்றிருக்கிறது. நாம் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறோம். இந்திய அணியின் மிகப்பெரிய செயல்திறனை எண்ணி பெருமைப்படுகிறோம் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி