செய்திகள்,திரையுலகம் நடிகர் விஷ்ணுவை வெறுப்பேற்றும் தயாரிப்பாளர்!…

நடிகர் விஷ்ணுவை வெறுப்பேற்றும் தயாரிப்பாளர்!…

நடிகர் விஷ்ணுவை வெறுப்பேற்றும் தயாரிப்பாளர்!… post thumbnail image
சென்னை:-வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு இதுவரை அரை டஜன் படங்களில் நடித்துவிட்டார். அவர் நடித்த படங்களில் நீர்ப்பறவை போன்ற சில படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததே தவிர வர்த்தக ரீதியில் பெரிய வெற்றி அடைந்ததில்லை. இந்நிலையில் கடந்த மாதம் வெளியான முண்டாசுப்பட்டி விஷ்ணுவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நிறைய புதுப்பட வாய்ப்புகள் தேடி வந்தும் அவற்றை உடனடியாய் ஏற்காமல் காத்திருப்பில் வைத்திருக்கிறார். காரணம் தற்போது அவர் நடித்து வரும் படங்கள் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை.சீனுராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு. எத்தன் சுரேஷ் இயக்கத்தில் கலக்குறே மாப்ளே என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் நிச்சயம் வெற்றியடையும் என்பது விஷ்ணுவின் நம்பிக்கை.

இப்படங்கள் வெளியான பிறகு புதிய படங்கள் ஒப்புக்கொண்டால் பெரிய சம்பளம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்.விஷ்ணுவின் நம்பிக்கையை காசாக்க முடியாதபடி தடையாக நிற்கிறாராம் – கலக்குறே மாப்ளே படத்தின் தயாரிப்பாளர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்து இன்னும் 10 நாட்கள் மட்டுமே பாக்கி இருக்கிறதாம். தயாரிப்பாளரோ அந்த 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தும் அளவுக்கு கையில் பணமில்லை என்று சொல்கிறாராம். செம கடுப்பில் இருக்கிறாராம் விஷ்ணு.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி