அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இந்தியா – பிரேசில் இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து!…

இந்தியா – பிரேசில் இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து!…

இந்தியா – பிரேசில் இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து!… post thumbnail image
போர்டலிசா:-பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நேற்று பிரேசிலியா நகரில் அந்நாட்டு அதிபர் தில்மா ரூசெப்புடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகள் இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.

சுற்றுச்சூழல், விண்வெளி, தூதரக ஆலோசனைகள், இயங்கும் தன்மை ஆகியவை தொடர்பாக மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் பிரேசிலியாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரக கட்டிடத்தையும் மோடி திறந்து வைத்தார். பிரிக்ஸ் மாநாடு நேற்றுடன் முடிந்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து புறப்பட்டார். வரும் வழியில் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் நேற்றிரவு தங்கினார். இன்று காலை அவர் விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் அமைதி முயற்சியில் இந்தியாவும் பங்கெடுக்க தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி