செய்திகள்,திரையுலகம் நளனும் நந்தினியும் (2014) திரை விமர்சனம்…

நளனும் நந்தினியும் (2014) திரை விமர்சனம்…

நளனும் நந்தினியும் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
அழகம் பெருமாள் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் இரண்டு குடும்பங்கள். இவர்களின் வாரிசுகள் மைக்கேல் மற்றும் நந்திதா. சிறு வயதிலேயே மைக்கேலுக்கு நந்திதா என இருவரது அம்மாக்களும் முடிவு செய்துவிடுகிறார்கள். நாளடைவில் மைக்கேல் இஞ்சினியரிங் படித்து முடித்து விடுகிறார். நந்திதா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.

வாலிப வயதை அடைந்தவுடன் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். இதற்கிடையில் அழகம் பெருமாள் தேர்தலில் நிற்கிறார். அதற்கு ஒத்துழைப்பு தரும்படி ஜெயப்பிரகாஷிடம் கேட்க, அதற்கு ஜெயப்பிரகாஷ் மறுத்து விடுகிறார். இதனால் அழகம் பெருமாள் தேர்தலில் தோல்வியை தழுவுகிறார். இதனால் இவர்களுக்குள் பகை ஏற்படுகிறது. இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் போதெல்லாம் முறைத்துக் கொள்கிறார்கள். நாளடைவில் பகை மேலும் வளர்ந்து குடும்பப் பகையாக மாறுகிறது. இந்த சூழ்நிலையில் மைக்கேலும் நந்தித்தாவும் நம் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள், நம் இருவரையும் ஒன்று சேர விடமாட்டார்கள் என்று முடிவு செய்து கோவிலில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.ஆனால் இரண்டு குடும்பமும் இவர்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் விரட்டியடிக்கிறார்கள். இவர்களின் மாமாவான சூரி இவர்களை சென்னைக்கு அணுப்பி வைக்கிறார். அங்கு நந்திதாவிற்கு ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைக்கிறது. ஆனால் மைக்கேல் வேலைக்குச் செல்லாமல் சினிமா திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற இலட்சியத்துடன் வீட்டிலேயே இருக்கிறார். ஒரு கட்டத்தில் நந்திதா மைக்கேலுக்கு திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்ற லட்சியத்திற்கு ஊக்கமளிக்கிறார்.இறுதியில் மைக்கேல் இயக்குனர் ஆனாரா? இவர்களை இவர்கள் குடும்பம் சேர்த்துக் கொண்டதா? என்பதே மீதிக்கதை.

படத்தில் அறிமுக நாயகனாக மைக்கேல், முதல் படம் என்பதால் நடிப்பதற்கு சிறிது சிரமப்பட்டிருப்பது போல் தெரிகிறது. காதல், செண்டிமெண்ட் என தன் நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். நாயகி நந்திதா, முந்தைய படங்களை விட இப்படத்தில் நடிக்க வாய்ப்பு அதிகம் என்றாலும் வலுவான காட்சிகள் அமையாதது வருத்தம். சூரி, அழகம் பெருமாள், ஜெயபிரகாஷ், ரேணுகா ஆகியோர் கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார்கள்.அஸ்வத் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். நிசாரின் ஒளிப்பதிவில் ஓரிரு காட்சிகளை ரசிக்கலாம். குடும்பத்தை பகைத்துக் கொண்ட ஒரு காதல் ஜோடி என்னவெல்லாம் பிரச்னைகளை அனுபவிக்கும் என்பதை இயக்குனர் வெங்கடேசன் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். வலுவான திரைக்கதை வைத்திருந்தால் படத்திற்கு கூடுதல் பலமாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் ‘நளனும் நந்தினியும்’ காதல்……….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி