செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லிக்கு இரண்டாவது இடம்!…

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லிக்கு இரண்டாவது இடம்!…

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லிக்கு இரண்டாவது இடம்!… post thumbnail image
புது டெல்லி:-உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் வரிசையில் டோக்கியோவுக்கு அடுத்தபடியாக இந்தியா தலைநகர் டெல்லி இரண்டாவது இடம் பெற்றுள்ளது. 1990க்கு பிறகு டெல்லியின் மக்கள் தொகை இரு மடங்காகியுள்ளதும் ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

உலகின் நகராமாயக்கல் குறித்து ஐநா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளது.வரும் 2030 வரையிலாவது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் வரிசையில் டெல்லி இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கியநாடுகள் அவையின் அறிக்கையில் பட்டிலியிட்டுள்ள நகரங்களின் வரிசையில், ஜப்பான் தலைநகர் டோக்கியா முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் டெல்லியும் உள்ளது.

6 வது இடத்தில் மும்பை உள்ளது. மும்பை வரும் 2030 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையில் நான்காவது இடத்தை பிடிக்கும் என்றும் அந்த அறிக்கை கணித்துள்ளது.
டோக்கியா டெல்லியை தொடர்ந்து ஷாங்காய் 23 மில்லியன் மக்கள் தொகையோடு மூன்றாவது இடத்திலும் உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி