செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 12 மொழிகளில் குர்ஆன்!…

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 12 மொழிகளில் குர்ஆன்!…

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 12 மொழிகளில் குர்ஆன்!… post thumbnail image
புதுடெல்லி:-புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களது புனித நூல் ஆன ‘குர்ஆன்’ உத்தரபிரதேச மாநிலம் பேரேலியில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கையில் எடுத்து செல்லத்தக்க வகையில் ஆன குர் ஆனுடன் இ–பேனா மற்றும் இயர்போன்கள் உள்ளன. அந்த இ–பேனாவை குர் ஆன் பக்கத்தில் தொட்டவுடன் எழுத்துக்கள் தெரியும்.அதன் பிறகு அதை படிக்க முடியும். அதில் உள்ள விசேஷம் என்னவென்றால் அந்த குர் ஆன் புத்தகத்தை இந்தி, ஆங்கிலம், உருது, மராத்தி, தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் படிக்க முடியும்.

இ–பேனாவை வேண்டிய மொழி குறியீட்டில் தொட்டால் போதும். அதற்குரிய மொழியில் ‘குர் ஆன்’ வாசகங்கள் தெரியும். அதன் விலை ரூ.3,500.தற்போது அது பேரெய்லி நகரில் அனைத்து கடைகளிலும் கிடைக்கிறது. பெர்சியன், அராபிக் மொழிகள் தெரியாதவர்களுக்கு டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ‘குர் ஆன்’ பயனுள்ளதாக இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி