செய்திகள்,திரையுலகம் உலகின் செக்ஸியான பெண்ணாக நடிகை தீபிகா படுகோனே தேர்வு!…

உலகின் செக்ஸியான பெண்ணாக நடிகை தீபிகா படுகோனே தேர்வு!…

உலகின் செக்ஸியான பெண்ணாக நடிகை தீபிகா படுகோனே தேர்வு!… post thumbnail image
மும்பை:-இங்கிலாந்தில் வெளியாகும் மாத இதழ் ஒன்று உலகின் 100 கவர்ச்சியான பெண்கள் போன்ற ஜனரஞ்சகமான பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்தப் பிரிவிற்காக நடத்தப்பட்ட இந்த ஆண்டு கருத்துக் கணிப்பில் இந்தியாவின் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

தொடர்ந்து மூன்று வருடங்களாக முதல் இடத்தில் இருந்த காத்ரீனா கைப்பை பின்னுக்குத் தள்ளி விட்டு இந்த படத்தைப் பெற்றுள்ளார். இது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார் தீபிகா. இது ஒரு அழகான ஆரம்பம். குறிப்பாக மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்று இது. ஒரு பெண்ணை மற்றவர்கள் செக்ஸியாக இருக்கிறார் எனச் சொல்வதே ஒரு பெருமைதான். யாராவது ஒருவர் வெற்றி பெற்றுத்தான் ஆகவேண்டும்.

பொதுவாகவே பெண்களை செக்ஸியாக இருக்கிறாய் என்று சொன்னால் அவர்கள் வெட்கப்பட்டு போய் விடுவார்கள், ஏனென்றால் அது அடுத்ததாக செக்ஸ் என்பதுடன் தொடர்புபடுத்திவிடும். பொதுவாக செக்ஸி என்றாலே அது உடலை வெளிச்சம் போட்டுக் காட்டும் விஷயம் என்று சொல்வார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் அது ஒருவருடைய குணநலனைப் பொறுத்தது. ஒருவர் நகைச்சுவை உணர்வுடன் இருந்தால் அது செக்ஸி, ஒருவர் தன்னம்பிக்கையுடன் இருந்தால் அது செக்ஸி, உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருந்தால் அது செக்ஸி என பல விளக்கங்கள் தருகிறார் தீபிகா படுகோனே.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி