செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் நால்வருக்கு அமெரிக்காவில் விருது!…

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் நால்வருக்கு அமெரிக்காவில் விருது!…

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் நால்வருக்கு அமெரிக்காவில் விருது!… post thumbnail image
நியூயார்க்:-இந்தியாவில் பிறந்து தங்களின் பங்களிப்பின் மூலம் அமெரிக்காவுக்கு பெருமை சேர்த்த நால்வர், அந்நாட்டில் விருது கவுரவப்படுத்தப்பட்டுள்ளனர். அந்நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் நடைபெற்ற விழாவில் இவர்கள் நால்வருடன் சேர்த்து மேலும் 36 பேரும் கவுரவப்படுத்தப்பட்டனர்.

ஸ்காட்லாந்து நாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவரான ஆண்ட்ரூ கார்னெகியால் நடத்தப்படும் கார்னெகி நிறுவனத்தின் சார்பில் இந்த விருதுகள் வழங்கப்பட்டது. நகைச்சுவை நடிகரான ஆசிப் மாண்ட்வி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நடெல்லா, கார்னெகி மெல்லான் பல்கலைக்கழகத்தின் தலைவரான சுப்ரா சுரேஷ் மற்றும் மேற்கு ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவரான பெஹருஸ் சேத்னா ஆகிய நால்வர் தான் இந்த விருதுகளை பெற்றவர்கள் ஆவார்கள்.1966 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த மாண்ட்வி முதலில் குடும்பத்துடன் பிரிட்டன் சென்று, பின்னர் தனது 16 வயதில் அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு “தி டெய்லி ஷோ” என்ற நிகழ்ச்சிக்கு பொறுப்பாளராக பதவி வகித்த அவர், தனது நையாண்டித்தனத்தால் அங்கு பெருத்த வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் ஹைதராபாத்தில் பிறந்தவரான சத்யா நடெல்லா, மணிபால் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டப்படிப்பை முடித்து 1980 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு சென்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.விஞ்ஞானியும் பொறியாளருமான சுரேஷ் சென்னையில் பிறந்து, பின்னர் அறிவியல்துறை பட்டப்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். அங்கு தனது பட்டப்படிப்பை முடித்த அவர், கார்னெகி மெல்லான் பல்கலைக்கழகத்தின் 9வது தலைவராக தற்போது பணியாற்றி வருகிறார். அதிபர் ஒபாமாவின் உத்தரவால் 2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் தேசிய விஞ்ஞான அறக்கட்டளையின் இயக்குனராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.1948ல் இந்தியாவில் பிறந்தவரான சேத்னா, மேற்கு ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் ஆறாவது தலைவராக பதவி வகித்துள்ளார். அந்நாட்டின் பல்கலைக்கழகத்தின் தலைவரான முதல் இந்தோ-அமெரிக்கர் சேத்னா என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி