அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வானதாக அதிர்ச்சி தகவல்…!

கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வானதாக அதிர்ச்சி தகவல்…!

கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வானதாக அதிர்ச்சி தகவல்…! post thumbnail image
சென்னையை அடுத்த போரூர் அருகே உள்ள மவுலிவாக்கத்தில், கடந்த 28–ந் தேதி 11 மாடி கட்டிட இடிந்து விழுந்த கோர விபத்தில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் வரை ஒரு குழந்தை உள்பட 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. கட்டிட விபத்தில் ஆந்திராவை சேர்ந்த 36 தொழிலாளர்கள் உள்பட 72 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று யூகத்தின் அடிப்படையில் மீட்புப்பணிகள் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகிறது.

ஆனால் இதுவரை உயிருடனும், சடலமாகவும் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80- க்கும் மேலாக அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் 30 பேர் சிக்கி இருப்பார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டிட விபத்து மீட்புப் பணிகள் இன்னும் 2 நாட்களில் முடியும் என்று டி.ஐ.ஜி. தகவல் அளித்துள்ளார். “இடிந்து விழுந்த கட்டிடத்தில் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 நாட்களில் இப்பணிகள் முடிவடையும்” என்று தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு தெரிவித்துள்ளது. கட்டிட விபத்து குறித்து 2 வாரத்துக்குள் அறிக்கை அனுப்பும்படி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி