செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் விஜய், அஜித் கூட்டணியில் ஏ. ஆர். முருகதாஸ்…!

விஜய், அஜித் கூட்டணியில் ஏ. ஆர். முருகதாஸ்…!

விஜய், அஜித் கூட்டணியில் ஏ. ஆர். முருகதாஸ்…! post thumbnail image
விஜய், அஜித் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அதன் பிறகு தனித்தனியாக நடிக்க துவங்கினர். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக இருக்கின்றனர். இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களில் பெரிய ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கிறார்கள். ஆனால் தமிழ் படங்களில் அது போன்ற நிலைமை இல்லை.

இந்த நிலையில் விஜய், அஜித்தை ஒன்றாக நடிக்க வைத்து படம் எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. ஏற்கனவே தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாக அறிவித்தார். வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படத்தை அவர் எடுக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் சூர்யாவை வைத்து அவர் படம் எடுக்கபோய் விட்டார்.

இந்த நிலையில் இருவரையும் சேர்த்து வைத்து படம் எடுக்க டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் வந்துள்ளார். அவர் கூறும் போது விஜய்யும் அஜித்தும் இணைந்து நடிக்க சம்மதித்தால் அந்த படத்தை இயக்க நான் தயாராக இருக்கிறேன். அவர்கள் இசைவு தெரிவித்தால் இரு மாதங்களில் கதையை தயார் செய்து விடுவேன். ஆனால் இருவரையும் ஒன்றாக நடிக்க வைப்பது சுலபமான காரியம் அல்ல என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி