செய்திகள்,திரையுலகம் அடுத்த நமீதா ஆகும் நடிகை அருந்ததி!…

அடுத்த நமீதா ஆகும் நடிகை அருந்ததி!…

அடுத்த நமீதா ஆகும் நடிகை அருந்ததி!… post thumbnail image
சென்னை:-வேடப்பன் என்ற படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர் அருந்ததி. அதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் நடித்தார். அதோடு, எஸ்.ஏ.சி மூலமே விஜய் படத்திலும் நடித்து தமிழில் நம்பர்-ஒன் நடிகையாகி விடுவேன் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார். ஆனால் அதையடுத்து அருந்ததி நடித்த படங்கள் எதுவுமே வெற்றி பெறாததால் அவரால் விஜய்யை நெருங்ககூட முடியவில்லை.

அதனால் தனது ஆசைகளை மூட்டைகட்டி வைத்து விட்டு, கிடைக்கிற படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சில புது வரவு நடிகர்களுடன் நடித்தவர், சமீபத்தில் நடித்த நேற்று இன்று படத்தில் அதிரடி கவர்ச்சியை வெளிப்படுத்தி பரபரப்பாகியிருக்கிறார். இதையடுத்து சில படவாய்ப்புகள் அவரை முற்றுகையிட்டுள்ளன. என்னதான் இனி நான் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று அவர் ஸ்டேட்மென்ட் கொடுத்தாலும்கூட, அவரைத் தேடிச்சென்றிருப்பதெல்லாமே கவர்ச்சிகரமான வேடங்கள்தான்.

அதனால், இனி தனக்கு இந்த மாதிரியான வேடங்கள்தான் கிடைக்கும் என்பதை புரிந்து கொண்ட அருந்ததி, அடுத்த நமீதாவாகும் திட்டத்துடன் சில படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். இதே ரூட்டிப் போனால் சில படங்களிலேயே நமீதாவின் இடத்தை நீங்கள் எளிதில் பிடிக்கலாம். அதோடு படத்துக்குப்படம் 5 லட்சங்களை உயர்த்திக்கொண்டே போகலாம் என்று சிலர் சொன்னதையடுத்து, இன்னும் இருக்கிற சில ஆண்டுகளில் முடிந்தவரை ஆடித்தீர்த்து விடுவோம் என்று வரிந்து கட்டி நிற்கிறார் அருந்ததி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி