செய்திகள்,திரையுலகம் ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்திரன் 2?…

ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்திரன் 2?…

ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்திரன் 2?… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யாராய் நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான படம் ‘எந்திரன்’. எந்திரன் படம் 120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது. எந்திரன் படம் வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்ததினால், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று ரஜினி ஆர்வம் காட்டி வந்தார். இயக்குநர் ஷங்கருக்கும் அதே எண்ணம் இருந்தது. ஐ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், ஓய்வு நேரத்தில் எந்திரன் 2 படத்தின் ஸ்கிரிப்ட்டை தயார் செய்துவிட்டார்.

எந்திரன் 2 படத்தின் பட்ஜெட் 250 கோடியை தாண்டும் என்பது ஷங்கரின் கணிப்பு. இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்யும் தயாரிப்பாளர் தமிழ்த்திரையுலகில் இல்லவே இல்லை. தற்போது பல கோடியைப் போட்டு பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் ஒரே தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம்தான். எனவே அவரை அணுகிய ரஜினி, எந்திரன் 2 படத்தை தயாரிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

160 கோடி பட்ஜெட் என்றால் தயாரிக்கிறேன், 250 கோடி செலவு செய்ய என்னால் முடியாது என்று அகோரம் கழன்று கொண்டார். அடுத்த முயற்சியாக ரிலையன்ஸ் நிறுவனத்தை அணுகினார்கள். எந்திரன் 2 படத்தை 250 கோடியில் தயாரிக்க ரிலையன்ஸ் ஒப்புக்கொண்டுவிட்டதாம். சில தினங்களுக்கு முன் அக்ரிமெண்ட் கையெழுத்தாகிவிட்டதாக தகவல்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி