செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் கொசுக்கள் மூலம் மலேரியாவை ஒழிக்க விஞ்ஞானிகள் திட்டம்!…

கொசுக்கள் மூலம் மலேரியாவை ஒழிக்க விஞ்ஞானிகள் திட்டம்!…

கொசுக்கள் மூலம் மலேரியாவை ஒழிக்க விஞ்ஞானிகள் திட்டம்!… post thumbnail image
லண்டன்:-மலேரியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகின்றன. இவை அனோபிலெஸ் கேம்பியா கொசுக்களால் உருவாகிறது. இதன் பெண் கொசுக்கள் மலேரியா நோய்க்கிருமிகளை உற்பத்தி செய்கிறது.பின்னர் அது ஒருவரை கடிப்பதன் மூலம் கிருமிகள் உடலுக்குள் புகுந்து மலேரியா நோயை ஏற்படுத்துகிறது.

எனவே, மலேரியா என்ற கொடிய நோயை கொசுக்கள் மூலமே ஒழிக்க லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் புதிய திட்டம் தீட்டி ஆய்வகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.அதன் படி புதிய மரபணு மூலம் மலேரியாவை உருவாக்கும் அனோபிலெஸ் காம்பியே கொசுக்களில் ஆண் கொசுக்களை மட்டும் 6 தலைமுறைகளாக மாற்றி மாற்றி உருவாக்கினர்.

அதன் மூலம் மலேரியாவை பரப்பும் பெண் கொசுக்கள் ஒழிந்து ஆண் கொசுக்களை மட்டும் பெருக்கமடைய செய்தனர்.இதன் மூலம் மலேரியா கிருமிகளை உருவாக்கும் கொசுக்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி