செய்திகள்,திரையுலகம் முத்தக்காட்சியில் நடிக்க மறுக்கும் நடிகை தமன்னா!…

முத்தக்காட்சியில் நடிக்க மறுக்கும் நடிகை தமன்னா!…

முத்தக்காட்சியில் நடிக்க மறுக்கும் நடிகை தமன்னா!… post thumbnail image
சென்னை:-கதாநாயகிகள் பலர் முத்த காட்சி மற்றும் நீச்சல் உடை காட்சிகளில் துணிச்சலாக நடிக்கிறார்கள். சக நடிகைகள் போட்டியை சமாளிக்கவும் மார்க்கெட்டை தக்க வைக்கவும் இதற்கு சம்மதிக்கின்றனர்.எனவே தமன்னாவிடமும் இது போன்ற காட்சிகளில் நடிக்கும்படி வற்புறுத்தப்படுகிறது.

அவர் தற்போது ஹம்சகல்ஸ் என்ற இந்தி படத்திலும் பாகுபலி என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் 2–ம் பாகத்திலும் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது. முத்த காட்சியில் நடிப்பது இல்லை என்று ஏற்கனவே முடிவு செய்து விட்டேன். அதில் இருந்து மாறமாட்டேன.

நீச்சல் உடையிலும் நடிக்க மாட்டேன். இது போன்ற காட்சிகளில் நடிக்கும்படி என்னை நிர்ப்பந்திக்கின்றனர். எனக்கு அதில் விருப்பம் இல்லை. கவர்ச்சியில் எல்லைக் கோட்டை தாண்ட மாட்டேன். ஹம்ச கல்ஸ் இந்தி படப்பிடிப்பில் எனக்கும் பிபாசாபாசுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் பரவி உள்ளது. அதில் உண்மை இல்லை. பிபாசாபாசு பழக இனிமையானவர். எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி