செய்திகள்,திரையுலகம் பிரபல நடிகை இனியா வீட்டில் பணம், நகை கொள்ளை!…

பிரபல நடிகை இனியா வீட்டில் பணம், நகை கொள்ளை!…

பிரபல நடிகை இனியா வீட்டில் பணம், நகை கொள்ளை!… post thumbnail image
திருவனந்தபுரம்:-தமிழில் யுத்தம் செய், வாகை சூடவா உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை இனியா இவரது தங்கை ஸ்வாதி மலையாள டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.இனியாவின் வீடு திருவனந்தபுரம் கரமனை அருகே உள்ள மருதூர்க்கடவில் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு இனியா தனது குடும்பத்துடன் சினிமாவுக்கு சென்றார். நள்ளிரவில் திரும்பி வந்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது படுக்கை அறை பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை, ரூ.5 லட்சம் பணத்தை காணவில்லை.

போலீஸ் விசாரணை மேற்கொண்ட போது, பூட்டு உடைக்கப்பட்டதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. கொள்ளை குறித்து இனியாவின் வீட்டினர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்து வருகின்றனர். இது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி