செய்திகள்,முதன்மை செய்திகள் அமெரிக்காவில் எரிமலை வெடித்து சிதறுவதால் பரபரப்பு!…

அமெரிக்காவில் எரிமலை வெடித்து சிதறுவதால் பரபரப்பு!…

அமெரிக்காவில் எரிமலை வெடித்து சிதறுவதால் பரபரப்பு!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகருக்கு தென் மேற்கில் 966 கி.மீ. தொலைவில் மக்கள் வசிக்காத பகுதியில் பாவ்லாப் எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை பல ஆண்டுகளாக வெடித்துச்சிதறி வருகிறது.

ஆனால் இப்போது அதில் வெடிப்பு தீவிரமாகி உள்ளது. 24 ஆயிரம் அடி உயரத்திலிருந்து இது சாம்பலுடன் கூடிய கரும்புகையை கக்கி வருகிறது.இதன்காரணமாக விஞ்ஞானிகள் கடும் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் இப்படி கடும் அபாய எச்சரிக்கை விடுத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த எரிமலை வெடிப்பு தொடர்பாக நிலவியல் ஆராய்ச்சியாளர் மிச்செல்லி கூம்ப்ஸ் கருத்து கூறுகையில், இந்த எரிமலை இன்னும் சில வாரங்களுக்கோ, ஏன், மாதங்களுக்கோ கூட வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கலாம். 8 ஆயிரத்து 261 அடி உயரம் உள்ள எரிமலையின் வாயிலிருந்து எரிமலைக்குழம்பு வெளியேறி, பனிப்படலத்தின் மீது விழுகிறது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி