செய்திகள் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிறையில் பிறந்த குழந்தை!…

மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிறையில் பிறந்த குழந்தை!…

மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிறையில் பிறந்த குழந்தை!… post thumbnail image
கார்டவும்:-சூடானை சேர்ந்தவர் மரியம் யாஹ்யா இப்ராகிம். 27 வயதான இந்தப் பெண் கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்துகொள்வதற்காக அந்த மதத்துக்கு மாறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்தகைய மதமாற்றத்துக்கு அரபு குடியரசு நாடான சூடானில் தடை உள்ளது. இதுதொடர்பாக சூடான் கோர்ட்டில் மரியம் மீது வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் மரியம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதை கைவிட வேண்டும மீண்டும் இஸ்லாமிய மதத்தில் சேரவேண்டும் இல்லையேல் மரண தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டது. இதற்காக அவருக்கு அவகாசம் தரப்பட்டது. ஆனால் அவர் மதம் மாறவில்லை. மரியம், ‘நான் ஒரு கிறிஸ்தவ பெண்’ என்று கூறி மதம் மாற மறுத்து விட்டார். இதனையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த தீர்ப்பை கண்டித்து 50க்கும் மேற்பட்ட மக்கள் கோர்ட்டு வளாகத்தின் முன்பு கூடி, மதத்திற்கு சுதந்திரம் வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதற்கிடையே சில இஸ்லாமிய அமைப்புகள் இந்த தீர்ப்பை வரவேற்றன. இந்த விவகாரத்தில் சூடான் அரசுக்கு எதிராக உள்நாட்டிலும், மேற்கத்திய நாடுகளிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த மரியம் இப்ராகிம்க்கு சிறை மருத்துவமனையில் பிறந்துள்ளது என்று அவரது வக்கீல் எல்ஷாரீப் அலி தெரிவித்துள்ளார். மரியத்திற்கு 20 மாத ஆண் குழந்தையும் உள்ளது. அக்குழந்தையும் மரியத்துடன் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி