செய்திகள்,திரையுலகம் கமல், விஜய், அஜித்,விக்ரமுக்கு விஜய்,அமலா பால் திருமண அழைப்பிதழ்!…

கமல், விஜய், அஜித்,விக்ரமுக்கு விஜய்,அமலா பால் திருமண அழைப்பிதழ்!…

கமல், விஜய், அஜித்,விக்ரமுக்கு விஜய்,அமலா பால் திருமண அழைப்பிதழ்!… post thumbnail image
சென்னை:-டைரக்டர் விஜய், நடிகை அமலாபால் திருமணம் வருகிற 12ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கின்றன.அமலாபால் முகூர்த்தத்துக்காக காஞ்சீபுரம் பட்டுபுடவை எடுத்துள்ளார். நிச்சயதார்த்தத்துக்கும் தனியாக ஆடைகள் எடுத்துள்ளார். நகைகளும் வாங்கி இருக்கிறார்.

தற்போது திருமண அழைப்பிதழ்கள் கொடுக்கும் வேலையில் இருவரும் ஈடுபட்டு உள்ளனர். விஜய் தனது படத்தில் நடித்த கதாநாயகர்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ்கள் கொடுத்து வருகிறார்.‘தலைவா’ படத்தில் நடித்த விஜய், கிரீடம் படத்தில் நடித்த அஜித், தெய்வத்திருமகள் படத்தில் நடித்த விக்ரம், மதராசபட்டணம் படத்தில் நடித்த ஆர்யா போன்றோருக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளார். கமலுக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளார். நடிகைகள் அனுஷ்கா, திரிஷா, எமிஜாக்சன் போன்றோருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது.

விஜய் இயக்கிய சைவம் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதில் நாசரும், புதுமுக நடிகர்,நடிகைகளும் நடித்துள்ளனர். இப்படக் குழுவினர் அனைவரும் திருமணத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அமலாபால் தன்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தோழிகளுக்கு வீடு வீடாக சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி