செய்திகள்,திரையுலகம் 13-ஆம் பக்கம் பார்க்க (2014) பட டிரைலர்…

13-ஆம் பக்கம் பார்க்க (2014) பட டிரைலர்…

13-ஆம் பக்கம் பார்க்க (2014) பட டிரைலர்… post thumbnail image
‘13-ஆம் பக்கம் பார்க்க’ என்ற பெயரில் புதுபடம் தயாராகிறது. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி புகழ்மணி இயக்குகிறார்.இவர் ராமநாராயணனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். திகில் படமாக தயாராகிறது.

ஒரு புத்தகத்தின் 13-ம் பக்கத்தில் சாத்தான் குடியிருக்கிறது. அந்த புத்தகத்தை படிப்பவர்கள் 13-ஆம் பக்கத்தை புரட்டும் போது அந்த சாத்தான் அவர்களை பிடித்து விடுகிறது. இதனால் ஏற்படும் பிரச்சினைகளே கதை.இதில் நளினி ஆவிகளை ஏவி விடுவது, பேய் ஓட்டுவது, பில்லி சூனியம் வைப்பது போன்றவற்றை செய்பவராக சுருட்டு பிடிக்கும் சுடலை ஆச்சி என்ற கேரக்டரில் வருகிறார்.

ராம்ஜி, டெல்லிகணேஷ், வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர், ரம்யா, துரைராஜ், வினோத் குமார்ராதா, விஜய் ராஜ்கீர்த்தி, பாக்கியா, ஸ்ரீரகா ஆகியோர் நடிக்கின்றனர். ஆர்.வி.கே.பிலிம் மீடியா சார்பில் வினோத்குமார் தயாரிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி