செய்திகள்,திரையுலகம் 82 வயதில் ரீ என்ட்ரியாகும் முன்னாள் கதாநாயகி!…

82 வயதில் ரீ என்ட்ரியாகும் முன்னாள் கதாநாயகி!…

82 வயதில் ரீ என்ட்ரியாகும் முன்னாள் கதாநாயகி!… post thumbnail image
சென்னை:-எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் சவுகார் ஜானகி. தில்லுமுல்லு, தீ படங்களில் ரஜினியின் அம்மாவாக நடித்தார். பின்னர் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த அவருக்கு இப்போது 82 வயதாகிறது.

இந்த வயதிலும் தெம்பாக இருக்கும் சவுகார் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘வானவராயன் வல்லவராயன்‘ படத்தில் நடிக்கிறார். இதுபற்றி பட இயக்குனர் ராஜமோகன் கூறும்போது, சவுகார் ஜானகி இதில் காமெடிக்கு மாறி இருக்கிறார். கிருஷ்ணா, சந்தானம், ஆனந்த், மோனல் கஜ்ஜார் நடிக்கின்றனர். கே.எஸ்.மதுபாலா தயாரிப்பு. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி