செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் செவ்வாய் கிரகத்தில் குடியேற 44 இந்தியர்கள் தேர்வு!…

செவ்வாய் கிரகத்தில் குடியேற 44 இந்தியர்கள் தேர்வு!…

செவ்வாய் கிரகத்தில் குடியேற 44 இந்தியர்கள் தேர்வு!… post thumbnail image
லண்டன்:-நெதர்லாந்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ‘மார்ஸ் ஒன்‘.2024ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றப் போவதாகவும் அந்த திட்டத்தில் சேர விரும்பும் நபர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கடந்த ஆண்டு அழைப்பு விடுத்தது.

ஒரு முறை மட்டுமே பயணம் செய்ய உள்ள இத்திட்டத்துக்கு, உலகம் முழுவதும் 140 நாடுகளில் இருந்து விண்ணப்பங்கள் குவிந்தது.மொத்தம் 2 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பித்திருந்த இதற்கு இந்தியாவில் இருந்து 20,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.கடந்த 2013 டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற முதல் கட்ட தேர்வில் 62 இந்தியர்கள் உட்பட 1,058 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு தகுதிச் சோதனை நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட தேர்வுச் சுற்றில் 353 பேர் நீக்கப்பட்டு 44 இந்தியர்கள் உள்பட 705 பேரை இந்த நிறுவனம் தேர்வு செய்துள்ளது.

இந்த 44 இந்தியர்களில் 17 பேர் பெண்கள். இந்த 705 பேரில் 418 ஆண்கள், 287 பெண்கள் உள்ளனர்.தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 705 பேருக்கும் அடுத்த கட்டமாக நேர்முகத்தேர்வு நடத்தப்படும் என்றும், அவர்களில் தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் வாய்ப்பை பெறுவார்கள் என்றும் மார்ஸ் 1 தொண்டு நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி நோர்பெர்ட் கிராப்ட் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி