செய்திகள்,முதன்மை செய்திகள் என்ஜினீயரிங், மருத்துவம் கட் ஆப் மதிப்பெண் உயருகிறது!…

என்ஜினீயரிங், மருத்துவம் கட் ஆப் மதிப்பெண் உயருகிறது!…

என்ஜினீயரிங், மருத்துவம் கட் ஆப் மதிப்பெண் உயருகிறது!… post thumbnail image
சென்னை:-பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியானது.கடந்த ஆண்டை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் மட்டுமின்றி பாட வாரியாக 200க்கு 200 எடுத்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.மருத்துவம், என்ஜினீயரிங் உயர் படிப்புகளில் சேருவதற்கான அடிப்படையாக உள்ள பாடங்களில் மாணவ–மாணவிகள் அதிக அளவில் மதிப்பெண்களை குவித்துள்ளனர்.

என்ஜினீயரிங் கட்ஆப் மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் கடந்த ஆண்டை விட 200க்கு 200 அதிக அளவில் எடுத்துள்ளனர்.இதனால் என்ஜினீயரிங் கட்ஆப் மதிப்பெண் கூட வாய்ப்பு உள்ளது.உதாரணத்திற்கு ஒரு என்ஜினீயரிங் கல்லூரியின் கடந்த ஆண்டு கட்ஆப் மார்க் 198ஆக இருந்தால் இந்த வருடம் 199 ஆக உயர வாய்ப்பு உள்ளது.இதே போல எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கான கட்அப் மதிப்பெண்ணும் கூடுகிறது.

மருத்துவ படிப்பில் சேருவதற்கான உயிரியல் பாடத்தில் மாணவர்களின் சென்டம் கடந்த ஆண்டை விட சற்று குறைவாக இருந்தாலும் கூட இயற்பியல், வேதியியல் பாடங்களில் 200க்கும் 200 பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மருத்துவ கட்ஆப் மதிப்பெண் 0.5 சதவிதம் உயர வாய்ப்பு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி